Friday, November 18, 2011

எம்மவர் கூட்டம்




மகாவலி கரையோரம்
   இசுருமுனி காதலர் ஜோடி
நடுவே பள்ளத்தாக்கில் தூண்டில் போட்டு
   மீன் பிடிக்க துடிக்கும் எம்மவர் கூட்டம்
 


குரங்குகள் தாவும் குறிஞ்சி மலை
   குமரனின் அருட் கடாட்சம்
நடுவே அம்மனையும் 
   தரிசனம் செய்யும் எம்மவர் கூட்டம்

ஆயிரம் கால் செனட் மண்டபம்
   பல்கலையின் தலைமை பீடம்
நடுவே பேஷன் ஷோ நடாத்தும்
   நடுவர்களாய் எம்மவர் கூட்டம்

வாடகை வீடாய் AKBAR hall
   தேடி வந்தவருக்கு புகலிடம்
நடுவே AK-BAR ஆக்க
   துடிக்கும் எம்மவர் கூட்டம்

புதுமை செய்யும் E- faculty
   இலங்கையின்  Oxford
நடுவே மண்குதிரை பிடிக்கும்
   மட்டி மடையனாய் எம்மவர் கூட்டம்

                                                                                                                R.K.Gobishanker

Saturday, August 6, 2011

கிறுக்கல்-3('ஜாதி)

பிராமணன் தான் வாழ
வகுத்தான் பல ஜாதி
குயவனாம் கொல்லனாம்
வேலை நிமித்தம்.
வேலைக்கு என்ன
தாழ் ஜாதி மேல் ஜாதி?

விட்டான பெண்னை இலக்கியகாரன்
பத்தினி ,சித்தினி
காந்தர்வி ,வித்யாதரி
குணம் கொண்டு
மருத்துவனும் விட்டானா
A, O+, B,  AB,O-
என்றான் இரத்தம் கொண்டு

ஜாதியும் பேதியும் என்றான்
ஒரு சாரன்
கலியான பேச்சு
அம்மா அவள் என்ன ஜாதி?
என்றான் அவனும்

[இன்றைய நவீன மனிதர்கள் ஜாதியை எதிர்போம் என்று வாய் சொல் பேசுவார்கள்
அவர்களை இகழ்து எழுதப்பட்டது]

Friday, July 29, 2011

கிறுக்கல்-2

செம்பருத்தி பூவின் மகரந்தம் உருவி
குங்குமக் கரைசல் பாலுடன் கலந்து
வானவில்லின் நிறங்கள் பிசைந்து
வெண்மதியின் குளிர்மை ஊட்டி
உன்னை செய்தானோ பிரம்மன்

உன் உடலில் கணவாய் வைத்து
பள்ளத்தாக்கு வெட்டி
ஓமோன்கள் பாய்ச்சி
மின்சாரம் செய்தானோ பிரம்மன்


நரம்புகள் என்னும் வயர்கள் பூட்டி
இடைநடுவே ஆளிகள் வைத்து
கண்கள் மூலம் மின்சாரம் பாய்சி
என்னை கொல்ல...........

Thursday, July 21, 2011

கிறுக்கல்-1

நீ இலத்திரன்
நான் புரோத்தன்
வா அணுகி அணுவாவோம்

நீயூத்திரன் இனத்திற்கே
ஏற்றம் கொடுக்கும் விஞ்ஞானத்தால்
முடியுமா உணக்கு
ஏற்றம் கொடுக்க?